படித்தவர்கள் அரசியல் வேண்டாம் என ஒதுங்கி விடாதீர்கள்

471

நாமக்கல் பூங்கா சாலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் கமலஹாசன், பொதுமக்களிடையே பேசினார், அப்போது பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு நான்கரை லட்சம் கோடி வருவாய் கிடைப்பதாக தெரிவித்தார்.

நான் முழு நேர அரசில்வாதியா என கேட்கின்றனர், ஆனால் என் மனம் முழு நேரமும் மக்களை பற்றிதான் சிந்தித்து கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அரசியல் சாக்கடை என்று ஒதுங்கி விடுவதால் தான் சாக்கடை ஊரெங்கும் பரவி வருகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய கமலஹாசன் படித்தவர்கள் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விடாதீர்கள் என்றும், நாம் எதிபார்க்கும் நாளை நமதே உருவாகும் எனவும் தெரிவித்தார்.