எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான ராஜ குரு கல்லறை கண்டுபிடிப்பு

451

எகிப்து : தலைநகர் கெய்ரோ அருகில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நடத்தியதில் 4 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லறையை தோண்டிப்பார்க்கும் பணியை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி உள்ளனர்.

ராஜ குரு வாட்யேயின் உடல் வைத்து அடக்கம் செய்யப்பட்ட பூ வேலைகளைக் கொண்ட கல்லால் ஆன சவப்பெட்டி பற்றிய தகவல்கள், வாட்யேயின் எலும்புகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ள அந்த கல்லறை வாழ்ந்து மறைந்த வாட்யே என்னும் ராஜ குருவுக்கு (அரச குருவுக்கு) உரியது என தெரியவந்துள்ளது.

பாரோ மன்னர்களின் சிலைகளும் தனது தாயார், மனைவி, பிற உறவினர்களுடன் காணப்படுகிற அலங்காரக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of