மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் மொர்சி காலமானார்

264

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்ட முகமது மொர்சி நீதிமன்றத்தில் விசாரணையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

எகிப்து நாட்டின் அதிபராக இருந்தவர் முகமது மொர்சி. இவர் முதன்முதலாக அரபு நாடுகளின் வரலாற்றில் மக்களால் ஜனநாயக முறையில் எகிப்து நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த நிலையில் அவர் பதவி விலகவேண்டுமெனவும், சில கிளர்ச்சியாளர்களால் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அவரை அந்நாட்டு இராணுவம் கடந்த வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து நீக்கியது.

67 வயதான மொர்சி மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

அந்த நாட்டு சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மூர்சியின் குடும்பத்தினர், மோர்சிக்கு இருந்த தீவிர உடல்நல பிரச்சனைகளான உயர் ரத்த அழுத்தம், சக்கரை நோய் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து தனிமை சிறையில் வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of