பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

205

வங்காளதேசத்தில் உள்ள டாக்கா-கொல்கத்தா நெடுச்சாலையில் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் ஃபரிட்பூர் மாவட்டத்தின் உபஜிலா என்ற பகுதியில் உள்ள பாலம் ஒன்றை கடந்தபோது சாலையின் எதிரே வந்த பைக்குக்கு வழிவிட்டது.

அப்போது எதிர் பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பாலத்தின் தடுப்புச்சுவர்களை இடித்துக்கொண்டு பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of