பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலன் மஸ்க்..!

1599

புளூம்பெர்க் பில்லினியர்ஸ் இன்டெக்ஸ், 2020-ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி, எலன் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய பிறகே, எலன் மஸ்கின் இந்த அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், 182 பில்லியன் டாலர் சொத்து மதிப்பின் என்ற கணக்கில், முதலிடத்தில் இருந்தாலும், அவருக்கும் எலன் மாஸ்கிற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லாததால், எலன் முதலிடத்திற்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, எலன் மாஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 128 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயின் மதிப்பின் படி பார்த்தால், சுமார் 94 லட்சம் கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி 10-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement