ராட்சத மீன்.. மூதாட்டிக்கு கிடைத்த வாய்ப்பு.. ஒரே நாளில் மாறிய வாழ்க்கை..

4194

மேற்கு வங்க மாநிலம் சாக்புல்டுபி என்ற கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா கார். கிட்டதட்ட 70 வயதிற்கும் மேற்பட்ட இவர், இன்று ஆற்றோரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது, மிகவும் பெரிய அளவிலான ராட்சத மீன் ஒன்றை பார்த்திருக்கிறார்.

இதையடுத்து, அதனை பிடிக்க முயற்சி செய்த அவர், ஆற்றில் இருந்து லாவகமாக தரைக்கு கொண்டு வந்திருக்கிறார். பின்னர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன், அப்பகுதி மீன் மார்கெட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

52 கிலோ எடையுள்ள இந்த மீன், சுமார் 3 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர், என் வாழ்நாளில் இதுபோன்ற மீனை நான் பார்த்ததில்லை. இந்த மீனை போலா என்று பெங்காலியில் அழைப்பார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து பேசிய உள்ளூர் வாசிகள், அந்த மீன், விரைவில் கொண்டு வரப்பட்டிருந்தால், இன்னும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டிக்கும் என்று தெரிவித்தனர். மிகவும் வறுமையில் இருந்த மூதாட்டி, ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறிவிட்டார்.

வாழ்க்கையில் உயர்வதற்கு எப்போது வேண்டுமானாலும் வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்திக்கொள்வது நம் கையில் தான் உள்ளது என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபனமாகியுள்ளது.