அதிமுக விருப்ப மனு விநியோகம்

66

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 17 தொகுதிகளுக்கான விருப்ப மனு அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்டது.காலை 10 மணிக்கு துவங்கிய விருப்ப மனு விநியோகம், மாலை 6 மணி வரை நடைபெற்றது.இதில், 325 பேர் தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்று சென்றனர்.விருப்ப மனு விநியோகத்தின் மூலம் 81 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை வசூலானது.

சென்னை பெரம்பூருக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ், ஆம்பூருக்கு அதிமுகவின் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் ஒசூருக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்