ஒரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி – எங்கே தெரியுமா?

547

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள மலோகம் கிராமத்தில் ஒரே ஒரு வாக்காளருக்காக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது.

அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் 2 லோக்சபா , 60 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 11-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முழுக்க முழுக்க மலைப்பிரதேசமான இங்கு, தேர்தலுக்காக வாக்குச்சாவடிகள் அமைப்பதும், தேர்தல் நடத்துவதும் தேர்தல் ஆணையத்திற்கு பெரும் சவாலாக இருக்கும்.

அருணாச்சல் – சீன எல்லையில் உள்ள கிராமமான மலோகம் அஞ்சவ் மாவட்டத் தலைநகர் ஹயுலியாங்-ல் உள்ளது. தலைநகரில் இருந்து சுமார் 39 கீமீ தூரத்தில் உள்ள இந்த கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் வேறுவாக்குச் சாவடிகளில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், 39 வயது சொகேலா மட்டும் பெயரை பதிவு செய்யவில்லை. அதனால் ஒரே ஒரு வாக்களார் செகேலாவுக்காக மலோகம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த தேர்தலின் போது அந்தப் பெண்ணுடன் அவருடைய கணவருக்கும் ஓட்டு இருந்தது. அப்போதும் 2 பேருக்காக இது போன்று தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. தற்போது அந்தப் பெண்ணின் கணவர் பிரிந்து போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலின் போது அந்தப் பெண்ணுடன் அவருடைய கணவருக்கும் ஓட்டு இருந்தது.

அப்போதும் 2 பேருக்காக இது போன்று தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. தற்போது அந்தப் பெண்ணின் கணவர் பிரிந்து போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement