திருமாவிற்கு ஒதுக்கிய சின்னம்!

852

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் சூழ்நிலையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான, திமுக மற்றும் அதிமுக ஆகியவை தங்களது கூட்டணி கட்சிகளை முடிவு செய்து, அதற்கான தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக வின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் அந்த சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் விழுப்புரம் தொகுதியில் து.ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

Advertisement