மோடியின் ஹெலிகாப்டர் சோதனை! தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்!

548

ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி சென்றிருந்தார். அந்த மாநிலத்தில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் கர்நாடகாவை சேர்ந்த முகமது மோசின் எனும் ஐஏஎஸ் அதிகாரியாகும்.

இவர் மோடியின் ஹெலிகாப்டர் விதிமுறைகளுக்கு உட்பட்டதா என சோதனை மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரை மீறி இந்த சோதனையை முகமது மோசின் செய்தார். இதனால் மோடியின் பயணம் 15 நிமிடம் தாமதமானதாகக் கூறப்படுகிறது.

இது சட்டவிரோதமானது என அம்மாவட்ட ஆட்சியர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து முகமது மோசின் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

“சிறப்புக்காவல் படையினர் இருக்கும் இடத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. எனவே விதிமுறைகளை மீறி முகமது மோசின் சோதனையிட்டுள்ளார். அதனால் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்” எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of