தேர்தல் அதிகாரிகள் 13 முறை சோதனை! அழுது புலம்பிய குமாரசாமி!

432

நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி இந்திய முழுவதும் உள்ள முக்கிய கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனிடையே தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, மாண்டிய பகுதியில் காரில் சென்றுக்கொண்டிருந்த போது, தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையை எதிர்த்து, குமாரசாமி கூறியதாவது:-

“பிரச்சாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. மாண்டிய தொகுதியில் எதிர்கட்சியினர் என்ன எடுத்த சென்றாலும், தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்வதில்லை.

கடந்த 2 நாட்களில் 13 இடங்களில் சோதனை செய்துள்ளனர். சோதனை செய்வதற்கு ஒரு எல்லை உண்டு. எல்லையை மீறி சோதனை செய்ய வேண்டாம்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of