ம.நீ.ம வேட்பாளருக்கு வந்த சோதனை! ஐயோ போச்சே போச்சே!

720

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. மேலும் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த இரண்டிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது.

இதற்கான முழு வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இதையடுத்து மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் வரிசையாக தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்து இருக்கிறது. இந்நிலையில் பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று 10 நிமிடம் காலதாமதமாக வந்துள்ளதாக கூறி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவரது மனுவை ஏற்க மறுத்துள்ளனர்.

இதனால் ம.நீ.ம கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.