பி.எம்.நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு! தேர்தல் ஆணையத்தின் அதிரடி முடிவு!

817

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து பி.எம்.நரேந்திரமோடி என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.

இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். மேரிகோம் படத்தை இயக்கிய ஓமங்க் குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

மோடியின் இளமை காலத்து வாழ்க்கை முதல் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வென்று நாட்டின் பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் உள்ளிட்டவை படத்தில் இடம்பெற்றுள்ளன.

மோடி படம் அடுத்த மாதம் 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படம் நடைபெற உள்ள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதமாக அமையும் என்று கூறப்படுகிறது.

எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of