திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

399

திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூரில் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா மனு அளித்தார். மனுவிற்கு பதிலளிக்க தமிழக தேர்தல் ஆணையத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து திருவாரூரில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என்பது குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of