சட்டப்பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்

714

சட்டப்பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டால் உடனடியாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையை முன்கூட்டிக் கலைத்தால் உடனடியாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்றும், புதிய அரசு அமையும் வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவை கலைக்கப்பட்ட பின் உள்ள இடைக்கால அரசு அன்றாடப் பணிகளைத்தான் செய்ய முடியும் என்றும், முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட மாநிலத்துக்கு மத்திய அரசும் எந்த ஒரு புதிய திட்டங்களையும் அறிவிக்க முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement