5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு : நடத்தை விதிகள் இன்றே அமல்

865

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவை ஆட்சிகாலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், மிசோரம் மாநில சட்டப்பேரவை ஆட்சிகாலம் டிசம்பர் 15-ம் தேதி நிறைவடைகிறது மற்றும் சமீபத்தில் கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலம் உட்பட 5 மாநிலத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான தேதிகளை இன்று புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும், முதல் கட்டமாக நவம்பர் 12 தேதியிலும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 20 தேதியிலும் நடைபெறும் என்றும், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும்,

மேலும், தமிழக அரசு கோரியதாலும், இடைத் தேர்தல் சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் பகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்க முடியாது என்றார்.

மேலும், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Advertisement