தேர்தல் திருவிழா தொடங்கியது. மோடி ட்வீட்.

122
election-fest11.3.19

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

இந்நிலையில், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில், ஜனநாயகத்துக்கான தேர்தல் திருவிழா துவங்கியது.

2019 லோக்சபா தேர்தலில் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். இத்தேர்தல் வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இந்திய குடிமகன்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். குறிப்பாக, முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்து சாதனையை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.