“காலை உணவு எங்கே..” நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணும் பணி..!

574

ஊராக உள்ளாட்சி தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் பல்வேறு காரணங்களுக்காக, வாக்கு எண்ணிக்கை பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டார உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் 8 மணிக்கு தொடங்கியது.

ஆனால், வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய சில நிமிடத்தில், தங்களுக்கு காலை உணவு வழங்கவில்லை என கூறி அரசு அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

Advertisement