சட்டசபை தேர்தல் – பிரச்சாரம் மேற்கொள்ளும் முன்னாள் தலைவர் | Rahul Gandhi

130

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இந்த மாதம் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தற்போது ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்கள் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 125 தொகுதிகளில் காங்கிரசும், 125 தொகுதிகளில் தேசியவாத காங்கிரசும் போட்டியிடுகின்றன. எஞ்சிய தொகுதிகளில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 13 மற்றும் 15-ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of