தேர்தல் விதிமுறை அமல் – ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தத் தடை

114

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தன. அதன்படி, இரவு10மணி முதல் காலை 6மணி வரை அரசியல் கட்சிகள் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பை வெளியிடவும், அரசியல் கட்சிகள் இரவு10 மணி முதல் காலை 6மணி வரை ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுனில் அரோரா குறிப்பிட்டார்.

தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.