வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி

294

மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி அங்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வியாழனன்று நடைபெற்ற மக்களை தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை பெண் அதிகாரி ஒருவர் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் நுழைந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளார் மேலும் அங்கிருந்த ஆவணங்களை நகல் எடுத்ததாகவும் தெரிகிறது. இதை கவனித்த அங்கு பணியிலிருந்த காவலர்கள் அந்த அதிகாரியை தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறியுள்ள புகாரில்

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரில் அனுமதி இல்லாமல் பெண் அதிகாரி உள்ளே நுழைந்தது எப்படி.இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் இங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை காண்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வலியுறுத்தி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக வேட்பாளர், மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் மேலும் பல அரசியல் கட்சியனர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் அரசியல் கட்சியனருடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of