இடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்

340

38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் ஒட்டப்பிடாரம் (தனி) அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தொகுதிகளுக்கு திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அதில், திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி உள்பட தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். தேர்தல் பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பொறுப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

மேலும் 4 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் முதல்கட்ட பிரசார பயணத்தை மே 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளார். அவரின் பிரசார பயண விவரம்:

மே 1, 2 தேதிகளில் ஒட்டப்பிடாரம் தொகுதியிலும், மே 3, 4 தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதியிலும், மே 5, 6 தேதிகளில் சூலூர் தொகுதியிலும், மே 7, 8 தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியிலும் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of