இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல்

195

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி), சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்குகிறது. அந்தத் தொகுதிகளுக்கு உள்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். பொது வேட்பாளர் என்றால் ரூ.10 ஆயிரமும் ஆதிதிராவிடர் வேட்பாளர் என்றால் ரூ.5 ஆயிரமும் கட்டி மனு அளிக்க வேண்டும்.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் 29-ஆம் தேதி ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும். மே 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அதே நாளில் ஏற்கெனவே நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிகையும் நடைபெறும்.
4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்துவிட்டநிலையில் மே 1-ஆம் தேதி முதல் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதிமுக சார்பிலும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ளது. இதரக் கட்சிகளும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of