ஏப்ரல் 27, 28ல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாது – சத்யபிரதா சாஹூ

309

மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்று வேட்பாளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை முதல் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் விறுவிறுப்பாக தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 27-ல் வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை என்பதாலும், வரும் ஏப்ரல் 28-ம் தேதி ஞாயிறு விடுமுறை காரணமாகவும் இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் இந்த இரண்டு நாட்களில் பெறப்படாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு தொகுதிகளிலும் வரும் மே 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of