பாஜகவுக்கு பாடம் புகட்ட நல்ல தருணமிது – முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்

380

சிவகங்கையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற வட்டார செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்  பேசியதாவது:

இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பகுத்தறிவு சுயமரியாதையை விதைத்த பெரியாரின் கொள்கைகளுக்கு உடன்படாத இயக்கமாக அதிமுக திகழ்கிறது.
பாஜக அரசு கடந்த தேர்தலில் அறிக்கையாக வெளியிட்ட எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

மாறாக சொல்லாத திட்டங்களான பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி விதிப்பு போன்றவற்றைதான் அமல்படுத்தினர். இதனால் அடைந்த இன்னல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

எனவே நாட்டில் வாழும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கும் வகையில் பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை (ஜிஎஸ்டி) உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்திய பாஜகவுக்கு வரும் மக்களவைத் தேர்தல் மூலம் பாடம் புகட்ட இதுவே சரியான தருணம் என்றார்

Advertisement