நெசவாளர்களுக்கு உற்ற தோழனாக அதிமுகவும் தேமுதிகவும் இருக்கும் – பிரேமலதா

161

ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆரணி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசியது:கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளோம். அதிமுக – தேமுதிக கூட்டணி அமையக் கூடாது என திமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்தது.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அந்தச் சூழ்ச்சிகளை முறியடித்து இந்த வெற்றிக் கூட்டணியை அமைத்தனர். நெசவாளர்களுக்கு உற்ற தோழனாக அதிமுகவும் தேமுதிகவும் இருக்கும். இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் ஆரணியில் ஜவுளிப் பூங்கா, தொழில் பூங்கா அமைக்கப்படும்.

நெசவாளர்கள் வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பினால் பாதிப்பு இருக்குமானால் தேர்தலுக்குப் பிறகு அமையப்போகும் ஆட்சியில் பிரதமரிடம் இந்த பிரச்னையை எடுத்துக் கூறி மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்துவோம் என்றார் அவர்.
பிரசாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of