திமுக-காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கும் – ஓ.பன்னீர் செல்வம்

406

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோவை ஒலம்பஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் பேசியதுதிமுக-காங்கிரஸ் கட்சியினர் ஏற்கெனவே 10 ஆண்டுகால ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி விவகாரத்தில் திமுகவினர் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. ஒன்றுக்கும் உதவாத சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்தனர்.

இத்திட்டம் தோல்வியடையும் என்று முன்கூட்டியே கணித்துச் சொன்னவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. 2011-இல் உச்ச நீதிமன்றம் சென்று காவிரி விவகாரத்துக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றி கண்டார். மக்கள் பயனடையும் வகையில் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் உள்பட பல்வேறுத் திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார்.

அதில் இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.  2023-ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்.
சிறுபான்மையினருக்கு அரணாக அதிமுக திகழ்கிறது. தற்போது, பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of