மோடி நாட்டின் காவலாளி அல்ல களவாணி – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 

749

கடலூர் மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ரமேஷ் மற்றும் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவனை  ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது என்றும் அதனை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்துள்ளதாக தெரிவித்தார். கடலூர் கடல் சூழ்ந்த ஊர் மட்டும் அல்ல கண்ணீர் சூழ்ந்த ஊர் என்று கூறினார்.

இயற்கை பேரிடர்களால் அடிக்கடி தாக்கப்படும் கடலூருக்கு உடனே வந்து உதவி செய்துள்ளதாக குறிப்பிட்டார். புயல் பாதித்தபோது வராத பிரதமர் மோடி தற்போது தேர்தலுக்காக தமிழகம் வருவதாக குற்றம்சாட்டினார். ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கு அ.தி.மு.க ஆட்சி தான் சிறந்த உதாரணம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சமீப காலங்களாக மோடி தான் காவலாளி என்று பேசி வருகிறார் என்றும் அவர் காவலாளி என்பதை தான் ஒத்துக்கொள்கிறேன் என்று கூறிய ஸ்டாலின் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு தான் மோடி காவலாளி என்று தெரிவித்தார். மோடி நாட்டின் காவலாளி அல்ல, களவாணி என்று அவர் விமர்சித்தார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of