தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்தார் பிரதமர் மோடி

332

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று மீண்டும் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி கேரளாவிலிருந்து நேற்றிரவு 10 மணியளவில் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.அவரை துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட மோடி பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தேனியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

இதற்காக மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனிக்கு செல்கிறார். தேனி தொகுதி அதிமுக வேட்பாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் தொகுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் பிரதமர் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு செல்ல உள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of