தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் – ராகுல்காந்தி

123

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, தேனி ஆகிய 4 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர் தமிழர்களின் மனங்களை பா.ஜ.க-வினரால் வெல்ல முடியாது என தெரிவித்தார். நாக்பூரில் இருந்து தமிழர்களை ஆள பா.ஜ.க நினைப்பதாக குற்றம்சாட்டிய அவர் தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு மொழி மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்றார்.

ஏழை மக்களை அடையாளம் கண்டு அவர்களின் குடும்பத்திற்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும் நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of