10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை – சத்யபிரதா சாஹூ

443

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் ஓட்டுப் பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக வாக்குப்பதிவு மைய அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பத்து வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை செய்துள்ளார்.

அவர் தனது பரிந்துரையில்  தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி 8, பூந்தமல்லி 1, கடலூர் 1, தருமபுரி- 8, கடலூர் – 1, திருவள்ளூர் – 1 என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற பரிந்துரைத்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of