தமிழர்களை ஏமாற்றும் இரண்டு தேசிய கட்சிகளையும் ஒழிப்பதே நாம் தமிழர் கட்சியின் முதல் வேலை – சீமான்

439

தமிழர்களை ஏமாற்றும் இரண்டு தேசிய கட்சிகளையும் ஒழிப்பதே நாம் தமிழர் கட்சியின் முதல் வேலை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் -திமுக பாஜக – அதிமுக கட்சிகள் நாட்டை நாசமாக்க கூட்டணி வைத்துள்ளதாக  குற்றம்சாட்டினார். மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் தமிழக மக்களை பிரிக்க ஒருபோது விடமாட்டோம் என்று கூறிய சீமான் தமிழர்களின் நலன் உரிமைகளை மீட்க விவசாயம் செழிக்க விவசாயிகள் நலனை காக்க நாம் தமிழர் கட்சி வேட்பார்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

Advertisement