உரிய ஆவணங்கள் இன்றி ரூ.673.73 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

396

நாடாளுமன்றத் தேர்தல் தேதியை மார்ச் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.இதனை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கடந்த சில நாட்களில் பறக்கும் படையினர் நாடு முழுவதும் நடத்திய சோதனையில், பணம், மதுபான பாட்டில்கள், தங்கம், வெள்ளி மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி ரூ.673.73 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ரூ.129.97 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழகம் முதலிடத்தில் உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of