திருப்பூரில் கட்சிக் கொடிகள் தயாரிப்பு பணிகள் திவிரம்

105

நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில், திருப்பூரில் கட்சிக் கொடிகள் தயாரிப்பு பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.குறிப்பாக அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட டி- சர்ட்கள், தொப்பிகள் தயாரிக்கும் பணிகள் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன.கடந்த ஜனவரி முதலே இதற்கான ஆர்டர்கள் வர தொடங்கி விட்டதாகவும் தற்போது இரவுப் பகலாக தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்பு சட்டமன்ற தொகுதிக்கு ஆயிரம் கொடி வீதம் தயாரித்து கொடுத்த நிலையில் தற்போது 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கொடி வரை தயாரித்து கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.