காற்று மாசை குறைக்க அறிமுகமாகும் ஆட்டோ | Electric Auto

363

அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல், டீசலில் இயங்கும் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு மாடல் ஆட்டோக்களை அறிமுகம் செய்துள்ளது. ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆட்டோவில் நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் ஷேர் ஆட்டோ பயன்பாட்டிலான அமைப்பை பெற்றுள்ளது.

ட்ரியோ ஆட்டோ வழக்கமாக மூன்று பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளது. ஐ.பி.67 தொழில்நுட்பம் பெற்ற இந்த ஆட்டோ தூசு மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்கக்கூடிய வகையிலான பேட்டரிகளை பெற்றுள்ளது. அதிகபட்சமாக 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ட்ரியோ ஆட்டோ 30 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்தும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of