மின்கட்டணம் 4.59 சதவீதம் உயர்வு! ஜூன் முதல் அமல்!

2187

புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் யூனியன் பிரதேசங்களுக்கான ஒழுங்குமுறை இணை ஆணையத்தின் முடிவின்படி மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் 4 சதவீத துணை கட்டணத்ததுடன் தற்போது உயர்த்தப்பட்டுள்ள 4.59 சதவீதம் உயர்வும் சேர்த்து 8.59 சதவீதமாக கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி மின் கட்டணம் 100 ரூபாய் என்றால், 8.59 சதவீத உயர்வுடன் சேர்த்து 108 ரூபாய் 59 காசுகள் செலுத்த வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வுக்கு நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டு நாட்களிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of