மின்சாரக்கட்டணம் வழக்கத்தைவிட பன்மடங்கு அதிகரிப்பு – பொதுமக்கள் குற்றச்சாட்டு

97

கொரோனா ஊரடங்கு காலத்தில், மின்கணக்கீடுமுறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தால், மின்சாரக்கட்டணம் வழக்கத்தைவிட பன்மடங்கு அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மின்சார வாரியம் வீடுகளுக்கு மின்கணக்கீடு செய்வதில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. கடந்த இரண்டுமாதங்களாக மின்கணக்கீடு பணியை ஊழியர்கள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், முந்தைய மாத கட்டணத்தை செலுத்தலாம் அல்லது நான்குமாதங்களுக்கான பதிவு செய்யப்பட்ட கட்டணத்தை செலுத்தவேண்டும் என கூறப்பட்டது.

இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. நான்குமாதங்களுக்கு சேர்த்து கட்டணம் செலுத்துவதால், 100 யூனிட் மானியம் ரத்து செய்யப்படுகிறது என்றும் ஒட்டுமொத்த கட்டணம் அதிகமாக இருக்கிறது என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால், பயன்படுத்திய மின்சார அளவீட்டை இரண்டாகப்பிரித்து கணக்கிட்டால் பாதிப்பு ஏற்படாது என்று பொதுக்கள் கூறியுள்ளனர்.

எனவே, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் மின்சாரக்கட்டணம் செலுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது குறித்து ஏராளமானோர் புகார் அளித்து வருகின்றனர். மின்வாரிய இயக்குநருக்கும் பொதுமக்கள் ஆன்லைனிலும், நேரடியாகவும் புகார் மனுக்களை அளித்துவருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of