மின்வாரியத்தின் உதவிப் பொறியாளர் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலை தளங்களில் பரவி வருவதை கண்டு தேர்வாளர்கள் பெரும் அதிச்சி அடைந்துள்ளனர்.

350 காலிபணியிடங்களுக்கான தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் பொறுப்புக்கான தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் முன்கூட்டியே வெளியாகி வாட்ஸ்-அப் படங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டுவருகிறது. தேர்வு மையத்தில் கொடுக்கப்படும்120 வினாக்கள் அடங்கிய கையேட்டை தேர்வு முடிந்தவுடனேயே திரும்பப் பெற்றுக்கொள்ளும் முறை இருக்கும் சூழ்நிலையில், 2 மணிநேரம் மட்டுமே நடைபெறக்கூடிய ஒரு தேர்வில் கேட்கப்படும் 120 வினாக்களையும், ஒருவரால் தேர்வு மையத்திலேயே மனப்பாடம் செய்துவிட்டு வந்து டைரியில் அப்படியே எழுதிவிட முடியாது என்பது குறிப்பிடதக்கது, இது முன்கூட்டியே வெளியானதாக இருக்குமோ என்று தேர்வாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது குறித்து உடனடியாக விசாரனை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here