மின்சார கட்டணம்..! நல்ல செய்தி சொன்ன அமைச்சர் தங்கமணி

385

தமிழகத்தில் மின்சார கட்டணம் தற்போது உயர்த்தப்படாது என மின்துறை  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தை மாற்றுவதற்கு தங்களிடம் தற்போது எந்த முன்மொழிவும் இல்லை என்றும்,  புதிய மின்சார இணைப்புகளுக்கான கட்டணத்தைத்தான் திருத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது எனவும் ஆனாலும் அதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

நிதி நெருக்கடி நீடித்து வந்தாலும், அதை மக்களை நோக்கித் திருப்ப  விருப்பம் இல்லை என தெரிவித்த அமைச்சர் தங்கமணி, நிதி நெருக்கடி இருந்தாலும், இன்னும் சில மாதங்களுக்கு மின்சார கட்டண உயர்வு இருக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of