உணவுக்கழிவில் மின்சாரம் ! அசத்தும் ஜப்பான் . .

176
food-waste-3.3.19

உலகின் பல நாடுகளிலும் அதீத தேவையும் அதேபோல அதீத தட்டுப்பாடும் நிறைந்த விஷயங்கள் பல, அவற்றுள் முதன்மையான ஒன்று மின்சாரம். காற்றாலை, அனல்மின்நிலையம், இயற்கை வாய்வு, சூரிய ஒளி, நீர் என்று பல்வேறு முறைகளில் பல்வேறு எரிபொருள்களை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றது.

மின்சாரம் தயாரிக்க இத்தனை வழிகள் இருப்பினும் நாளுக்கு நாள் புதுப்புது முறைகள் உலகம் முழுவதும் கண்டறியப்பட்டு தான் வருகின்றது. தற்போது ஜப்பான் நாட்டில் உள்ள “J Bio Food Recycle” என்ற நிறுவனம் உணவு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய முறையை கண்டறிந்துள்ளது.

உணவுவிடுதி, அலுவலகம், வீடு என்று பல இடங்களில் இருந்து கிடைக்கும் பல டன் உணவு கழிவுகளை நுண்ணுயிர் நொதித்தல் என்ற முறையின் மூலன் நொதிக்கவைத்து உருவாகும் மீத்தேன் வாயுவை எரிபொருளாக கொண்டு மின்சாரம் தயாரிக்கவுள்ளது. இந்த வகை மின்சார உருவாக்கத்தால் உணவு கழிவுகளால் ஏற்படும் சுற்றுசூழல் மாசும் குறையும் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.