இன்னும் ஒரு வாரத்துக்குள் முழுமையாக மின்சாரம் கிடைத்துவிடும் – மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

456

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மின் இணைப்பு பணியில் ஈடுப்பட்ட ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த விரையன் என்பவர் மின்சாரம் தாக்கி காயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, 25 ஆயிரத்ததுக்கு மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பணி செய்து வருவதாகவும், நகர் பகுதிகளில்100 சதவீகித மின்இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும் கிராம பகுதிகளில் 50 சதவீகிதற்கு மேல் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் ஒரு வார காலத்துக்குள் முழு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட வேண்டாம் எனவும், மக்களிடம் பிரச்சனைகளை தூண்டி விட ஒரு சில அரசியல் கட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.