மின்னணு கழிவுப்பொருட்கள் அதிகரிப்பு.., 5 வது இடம் இந்தியா.., ஆய்வில் அதிர்ச்சி தகவல்

144

இந்தியா போன்ற வளர்த்து வரும் நாடுகளில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் அதிகளவில் பயன் படுத்தப்படுகின்றனர். ஆண்டு தோறும் மின்னணு தேவைகளின் அளவு அதிகரிப்பது போலவே அதனால் உண்டாகும் கழிவுகளின் அளவும் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து அசோசம் தொழில் வர்த்தக சபை நடத்திய ஆய்வில் நாம் எதிர்பார்த்தது போலவே ஆண்டுக்கு ஆண்டு மின்னணு கழிவுகள் அதிகரித்து வருவதை அவர்களும் உறுதி செய்தனர்.மின்னணு கழிவுகள் உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 5 இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் சீனாவும், அடுத்த இடங்களில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் மின்னணு கழிவுகளின் பயன்பாடு 19.8 சதவீதமாக உள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் ஆண்டுக்கு 47,810 டன் மின்னணு கழிவுப்பொருட்களே மறு சுழற்சி செய்யப்படுகின்றன.

இந்தி கழிவுப்பொருட்களின் பயன்பாட்டில் தமிழகத்தின் பங்கு சற்று அதிகம் தான் 13 சதவீதமாக உள்ளது. இதில் வருடத்திற்கு 52,427 டன் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன.