யானை தாக்கி பழங்குடியின நபர் ஓருவர் பலி..!

433

ஆனைகட்டி பகுதி அருகே கொண்டனூர் புதூர் என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், பணப்பள்ளிமலை கிராமத்திற்கு தமது மனைவியை பார்க்க, காட்டு வழியாக நடந்து சென்றுள்ளார்.

நகாமரம் நீரோடை சந்திப்பு பகுதியில் சென்றபோது காட்டுயானை தாக்கியதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலத்தைக் கைப்பற்றிய வனத்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.