குட்டியை தேடி கோவத்துடன் திரியும் காட்டு யானை

259
Elephant

நீலகிரி அருகே குட்டியானையை பிரிந்து கோவத்துடன் திரியும் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட வன ஊழியரை தாக்கியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஓவேலி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குட்டி யானையை பிரிந்து காட்டுயானை ஓன்று மிகவும் கோபத்துடன் சுற்றி திரிந்து வருகிகிறது.

காட்டு யானை தேயிலை தோட்ட தொழிலாளர்களை தாக்கும் என்பதால் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் யானையை விரட்டும் போது வன ஊழியர் ஒருவரை யானை தாக்கியதால் அவர் காயமடைந்தார். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.