பசியால் பலியான யானை!

400

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப் பகுதியில், பவளக்குட்டை கிராம காப்புக்காடு பகுதியில் ஆண் யானை ஒன்று சுற்றித் திரிவதாக வனத் துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு வனத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சென்றனர்.

அங்கு 15 வயது ஆண் யானை இடது காலில் பலத்த காயமடைந்து நடக்க முடியாமல் சோர்வுடன் காணப்பட்டது. மருத்துவக் குழுவினர் அதற்கு உணவு கொடுத்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை அந்த யானை இறந்தது. இதையடுத்து உடற்கூறு பரிசோதனை செய்து அதே இடத்தில் யானையின் உடலை புதைத்தனர்.

இது குறித்து வனத் துறையினர் கூறியதாவது இன்னொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த யானை நடக்க முடியாத நிலையில் இருந்தது. இதனால் இரை தேட முடியாத நிலை ஏற்பட்டு பல நாட்கள் பசியால் கிடந்துள்ளது. உரிய சிகிச்சையளித்தும் யானை இறந்து விட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of