ஓசூர் அருகே உள்ள “தளி” வனப்பகுதியில் 40 க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தஞ்சம்

776

ஓசூர் அருகே உள்ள “தளி” வனப்பகுதியில் 40 க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தஞ்சமடைந்துள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டு யானைகளின் இடப்பெயர்ச்சி ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் துவங்குகிறது. இந்நிலையில், தமிழக எல்லையான ஓசூர் அருகேயுள்ள தளி வனப்பகுதியில் 40 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது.

ஒரு பெரிய குழுவாக நிற்கும் இந்த காட்டுயானைகளின் நடமாட்டத்தை ஜவளகிரி வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது இந்த காட்டுயானைகள், தேன்கனிகோட்டை, ஓசூர் வனப்பகுதிகளுக்குள் நுழைந்து விளைநிலங்கள் சேதப்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த காட்டுயானைகளை, தளி வனப்பகுதியிலிருந்து, கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of