ரேஷன் கடையில் இருந்த அரிசியை சாப்பிட்ட யானைகள்

114

நீலகிரி அருகே ரேஷன் கடை மற்றும் மளிகை கடைக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திச் சென்றது.

குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் கிராமத்தில் முகாமிட்டுள்ள 4 காட்டு யானைகள் அங்கிருந்த ரேஷன் கடை மற்றும் மளிகை கடைக்குள் புகுந்தது.

ரேஷன் கடையில் இருந்த 300 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை நாசம் செய்த யானைகள் மளிகை கடையில் இருந்த மளிகை பொருட்களையும் சாப்பிட்டன.

இதனால் ஏராளமான பொருட்கள் சேதமானதாக தெரிவித்த அப்பகுதி மக்கள் யானைகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of