தூதரக பணியாளர் கொலை ஒருவருக்கு தூக்கு .

211
hang 4.3.19

சவூதி அரேபியா நாட்டில் உள்ள வங்கதேசத்திற்கான தூதரகத்தில் பணியாற்றி வந்தவர் கலாப் அல் அலி, இவர் கடந்த 2012ம் ஆண்டு வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் ஒரு கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு டாக்கா விரைவு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் 4 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட ஒரே குற்றவாளியான சைபுல் இஸ்லாம் மாமுன் என்பவருக்கு காசிப்பூரில் உள்ள மத்திய சிறையில் நேற்றிரவு 10 மணியளவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of