மேகத்தை கிழித்துக்கொண்டு தரையிறங்கிய விமானம்..! – வைரலாகும் வீடியோ

1013

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், துபாயில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஏ380 எனும் விமானம், மேகத்திலிருந்து வெளிப்படுவதை காட்டியுள்ளது.

இந்த வீடியோ பார்ப்பதற்கு, கூடியிருக்கும் மேகத்தை கிழித்துக் கொண்டு விமானம் ஒன்று பறந்து வந்து தரை இறங்குவது போல காட்டப்பட்டுள்ளது. 10 நொடி மட்டுமே இந்த வீடியோ உள்ளது.

இந்த வீடியோவிற்கு அந்நிறுவனம் ‘கிராண்ட் எண்ட்ரன்ஸ்'(Grand Entrance) என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement