மின்சாரம் கிடைக்காத இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் – கமல்ஹாசன்

290

மின்சாரம் கிடைக்காத இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் பகுதியில் மின்வாரிய ஊழியர்களை கமல்ஹாசன் சந்தித்து பாராட்டினார். பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பேசிய அவர், மின்சாரம் கிடைக்காத இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டடம் அக்குச்சிப்பட்டியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் வழங்கினார்.

பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்த பின்னர், அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்ன பேசிய அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உடனடியாக மீட்டு எடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நீதி மய்யக் கட்சி எடுக்கும் என உறுதி அளித்தார்